தெலுங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் சேவல்லா மண்டலம் அள்ளூர் அருகே சாலையோர வியாபாரிகள் காய்கறிகளை விற்பனை செய்து கொண்டிருந்தனர். இன்று மாலை அந்த வழியாக வந்த லாரி ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பயங்கர வேகத்தில் பாய்ந்து வந்தது.
லாரி கட்டுப்பாட்டை இழந்து பாய்ந்து வருவதை பார்த்த வியாபாரிகள் ஓட்டம் பிடித்தனர். ஆனால் அவர்கள் மீது லாரி மோதி வியாபாரிகள் 10 பேர் உடல்கள் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதில் மேலும் சில வியாபாரிகள் படுகாயம் அடைந்தனர்.
இந்த விபத்தில் படுகாயமடைந்த வியாபாரிகளை மீட்டு சேவல்லாவில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்தா போலீசார் லாரி கேபினில் சிக்கிக் கொண்ட டிரைவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
This website uses cookies.