உத்தரபிரதேசம் மாநிலம் வாரணாசியில் உள்ள கண்டோன்மென்ட் ரயில் நிலையத்தில் வாகனம் நிறுத்தும் இடத்தில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது. இதனால், அங்கிருந்த 200க்கும் மேற்பட்ட டூவிலர்கள் எரிந்து சேதமடைந்தன. இதில் பெரும்பாலான வாகனங்கள் ரயில்வே ஊழியர்களுக்கு சொந்தமானது என தெரியவந்துள்ளது.
12 வாகனங்களில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் இரண்டு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். ‘ஷார்ட் சர்க்யூட்’ காரணமாக தீவிபத்து ஏற்பட்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
This website uses cookies.