பிராமணர்களுக்குப் பாதுகாப்பு சட்டம் இயற்ற வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி சார்பில் கடந்த 3ஆம் தேதி (03.11.2024) சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட நடிகை கஸ்தூரி தெலுங்கர்கள் குறித்து பேசியது கடும் சர்ச்சையை ஏற்ப்படுத்தியது. அவருடைய பேச்சுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து நடிகை கஸ்தூரி மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இது தொடர்பாக அவருக்குச் சம்மன் அனுப்பி விசாரணைக்கு ஆஜர்ப்படுத்த எழும்பூர் காவல்துறையினர் முயற்சி எடுத்தனர். ஆனால் அவருடைய வீடு பூட்டப்பட்டதோடு செல்போனும் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.
தொடர்ந்து அவர் தலைமறைவானதாக தகவல்கள் வெளியானது. அவரை பிடிக்க இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் ஹைதராபாத்தில் நடிகை கஸ்தூரியை போலீசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அவரை சென்னை அழைத்து வந்து விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
This website uses cookies.