தமிழ்நாடு

பெரியார் சிலை விவகாரம் : எச் ராஜாவுக்கு சிறை தண்டனை

தமிழக பாஜகவின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக இருந்து வருபவர் எச். ராஜா. இவர் கடந்த 2018ம் ஆண்டில் பெரியார் சிலையை உடைப்பேன் என எக்ஸ் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருந்தார். மேலும் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி குறித்தும் அவதூறாக பேசினார்.

இது தொடர்பாக எச்.ராஜா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள எம்.எல்.ஏ., எம்.பி.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்குகளை தள்ளுபடி செய்யக்கோரிய எச்.ராஜாவின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டுள்ளது.

இந்த தீர்ப்பில் எச்.ராஜா குற்றவாளி என்றும் அவருக்கு தலா 6 மாத சிறைதண்டனையும் விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், எச்.ராஜாவுக்கு மேல்முறையீடு செய்ய 30 நாட்கள் காலஅவகாசம் வழங்ககி நீதிபதி உத்தரவிட்டார்.

Recent Posts

This website uses cookies.