தென் பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, திருவண்ணாமலையில் ரூ.16 கோடியில் கட்டப்பட்ட பாலம் இடிந்து விழுந்தது மக்கள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் அகரம்பள்ளிப்பட்டு மற்றும் தொண்டமானூர் கிராமங்களை இணைக்கும் வகையில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே ரூ.16 கோடியில் உயர்மட்ட பாலம் கட்டப்பட்டது. இந்த பாலத்தை கடந்த செப்டம்பர் மாதம் 2ம் தேதி தமிழக அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைத்தார்.
ஃபெஞ்சல் புயல் காரணமாக தென் பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட 119 அடி உயரம் கொண்ட சாத்தனூர அணை வேகமாக நிரம்பியது. இதில் ரூ.16 கோடியில் கட்டப்பட்ட பாலம் இந்த வெள்ளத்திற்கு அடித்துச் செல்லப்பட்டது சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் மக்கள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
This website uses cookies.