வங்கக்கடலில் உருவான ஃபெஞ்ஜால் புயல் கடந்த சனிக்கிழமை மரக்காணம் – புதுச்சேரி இடையே கரையை கடந்தது. அப்போது புதுச்சேரியில் கனமழை பெய்தது. இதன் காரணமாக பெரும்பாலான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
இந்நிலையில் புதுச்சேரியில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அம்மாநில முதலவர் ரங்கசாமி நிவாரணம் அறிவித்துள்ளார். அதன்படி அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.5000 வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
வெள்ளத்தில் முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்கு ரூ.20,000, விவசாய நிலம் ஹெக்டேருக்கு ரூ.30,000 நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். மேலும் கனமழையால் உயிரிழந்த 4 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ. 5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
This website uses cookies.