தமிழ்நாடு

இலவச மகளிர் பேருந்தில் பெண்களிடம் கட்டணம் வசூலித்த நடத்துனர்

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி பேருந்து நிலையத்திற்கு வந்த இலவச மகளிர் பேருந்தில் பெண்களிடம் கட்டண வசூலித்த நடத்துனரிடம் பெண்கள் வாக்குவாதம் செய்தனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

திண்டுக்கல் நத்தம் பணிமனையில் இருந்து தநா-57 நா-1272 என்ற எண் கொண்ட இலவச மகளிர் பேருந்து நத்தம், கொட்டாம்பட்டி சிங்கம்புணரிக்கு தினசரி இயக்கப்பட்டு வருகிறது.

இன்று மாலை நத்தத்தில் இருந்து வந்த இலவச மகளிர் பேருந்தில் நத்தம், சமுத்திராப்பட்டி, கொட்டாம்பட்டி பகுதியில் ஏரிய பெண்களுக்கு கட்டணம் வசூல் செய்யப்பட்டது. பாண்டாங்குடியில் ஏரிய பெண்களுக்கு கட்டணம் வசூல் செய்யவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் சிங்கம்புணரியில் இறங்கியவுடன் “இலவச மகளிர் பேருந்தில் எப்படி கட்டணம் வசூல் செய்யலாம்” என நடத்துனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

வாக்குவாதம் நடந்த போது வீடியோ எடுத்த நபரை வீடியோ எடுக்காதே என கூறிய நடத்துனர் பெண்களிடம் கட்டணம் வசூலித்த பணத்தை திருப்பிக் கொடுக்காமல் ஓட்டுனர் பேருந்தை எடுத்துக்கொண்டு நத்தம் புறப்பட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பேருந்து நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Recent Posts

This website uses cookies.