ஏ.டி.எம்., மையங்களில், 24 மணி நேரமும் காவலாளிகளை நியமிக்குமாறு, வங்கிகளை காவல் துறை அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது: பகல், இரவுக்கு தனித்தனி காவலாளிகளை நியமிக்க வேண்டும். 60 வயதுக்கும் மேற்பட்டோரை, ஏ.டி.எம்., மையங்களில் காவலாளியாக நியமிப்பதை தவிர்க்க வேண்டும்.
ஏ.டி.எம்., மையங்களில், தரமான கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும். அதன் இயக்கம் குறித்து அடிக்கடி ஆய்வு செய்ய வேண்டும். அடிக்கடி வந்து செல்லும் சந்தேக நபர்கள் குறித்து படம் பிடித்து, அருகில் உள்ள காவல் நிலையங்களில் ஒப்படைக்க வேண்டும்.
ஏ.டி.எம்., மையம் அருகே நீண்ட நேரம் அமர்ந்து இருப்போர், அந்த மையத்தை சுற்றி வரும் சந்தேக நபர்கள் குறித்தும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என, வங்கி அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.