திண்டுக்கல் பேருந்து நிலையத்திலிருந்து வேடசந்தூருக்கு செல்லக்கூடிய அரசு பேருந்து திண்டுக்கல் புறநகர் பகுதியான எம் வி எம் மகளிர் கல்லூரி மேம்பாலத்தின் மேல் ஏறிய பொழுது அரசு பேருந்து ஓட்டுநர் பேருந்தை இயக்க முடியாமல் மிகவும் திணறியுள்ளார்.
மேம்பாலத்தின் மையப் பகுதிக்கு முன் வரும் பொழுது பேருந்து பழுதடைந்து பாதி வழியிலேயே நின்றது.மேல் நோக்கி ஏறிய பேருந்தை இரும்பு கம்பிகளால் ஆன வேகத்தடை கொண்டு பேருந்தின் சக்கரத்தில் வைத்து நிறுத்தப்பட்டது. இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் பத்திரமாக மாற்றுப் பேருந்துக்கு அனுப்பப்பட்டனர்
போக்குவரத்து துறையில் உள்ள பெரும்பாலான பேருந்துகள் ஓட்டை உடைசல் பேருந்துகளாக உள்ள நிலையில் பேருந்து பயணிகளின் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலையே இந்த ஆட்சியில் நிலவுவதாக பேருந்து பயணிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக மேம்பால பகுதியில் நின்றிருந்த அரசு பேருந்தால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்பு அடைந்தனர்.