41
மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் பேரவைகளுக்கான தேர்தல் மற்றும் கேரள மாநிலம் வயநாடு தொகுதிக்கான தேர்தல் தேதி வெளியாகி உள்ளது.
அதன்படி, ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு நவம்பர் 13 மற்றும் 20 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது.
மகாராஷ்டிர மாநிலத்துக்கு நவம்பர் 20 ஆம் தேதி ஒரு கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.
நவம்பர் 13-ஆம் தேதி வயநாடு மக்களவைத் தொகுதிக்கு வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகள் நவம்பர் 23ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.