தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக சென்னையில் இருந்து பலரும் தங்களது சொந்த ஊருக்கு பயணம் செய்தனர். தீபாவளி பண்டிகை முடித்துவிட்டு மக்கள், மீண்டும் சென்னைக்கு திரும்பி வருகின்றனர்.
ரயில் நிலையங்களில் கூட்டம் நிரம்பி வருகிறது. ரயிலில் உட்கார இடம் இல்லாத போதும், பலர் நின்று கொண்டே பயணம் செய்தனர். இதன் காரணமாக, முன்பதிவில்லாத ரயில்களை கூடுதலாக இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.
இதனை தொடர்ந்து ஆம்னி பேருந்துகளின் கட்டணம் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. மதுரையில் இருந்து சென்னைக்கு 3 ஆயிரத்து 500 ரூபாய் வரை வசூலிக்கப்படுவதால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
பண்டிகை முடிந்து கார்களில் சென்னைக்கு திரும்புவோரால் செங்கல்பட்டு அடுத்த பரனூர் சுங்கச்சாவடியில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதேபோல, சென்னை புறநகரில் உள்ள வண்டலூர் மற்றும் பெருங்களத்தூரிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.