18
உத்தரகாண்ட் அல்மோரா எல்லையில் 46 பயணிகளை ஏற்றி கொண்டு சென்ற பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 20 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 20 பேர் பலத்த காயமடைந்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு படையினர் நீண்ட நேரம் போராடி உயிரிழந்த, 20 பேரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் காயமடைந்த 20 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பேருந்து விபத்துக்குள்ளான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன.