மெட்ராஸ் ஐ என அழைக்கப்படும் தொற்று தற்போது தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. மெட்ராஸ் ஐ பாதிப்பு உள்ளவர்கள் சுயமாக சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டாம் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
மெட்ராஸ் ஐ வருவதை தடுக்க முடியாது. ஆனால் முறையாக சிகிச்சை எடுத்துக் கொண்டால் மெட்ராஸ் ஐ பரவுவதை தடுக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.
மெட்ராஸ் ஐ வந்தவர்கள் கண்களை தொடாமல் இருக்க வேண்டும். கண்ணாடி அணிவதன் மூலம் விரைவில் குணமடைய வாய்ப்புள்ளது.
கண்கள் சிவந்த நிறத்தில் காணப்பட்டால் மெட்ராஸ் ஐ என புரிந்து கொண்டு அதற்கான தகுந்த சிகிச்சையை எடுத்துக் கொள்ள வேண்டும்.
மெட்ராஸ் ஐ குணமடைய இரண்டு முதல் நான்கு வாரம் ஆகலாம். மருத்துவர்கள் பரிந்துரை செய்த மருந்துகளை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும்.
செல்போனை பார்ப்பதை தவிர்க்க வேண்டும். அது நோயை இன்னும் அதிகரிக்க வழிவகுக்கும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.