21
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 15 மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படை கைது செய்தது. பின்னர், அவர்களை சிறையில் அடைத்தனர்.
இந்த சூழலில், இன்று ஊர்க்காவல் நீதிமன்றத்தில் 15 மீனவர்களும் ஆஜரானார்கள். அப்போது, 11 மீனவர்களுக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்க நீதிபதி உத்தரவிட்டார்.
11 மீனவர்கள் 2-வது முறையாக சிறையில் அடைக்கப்பட்டதால், அவர்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்படுவதாகவும், புதியதாக கைதான 4 மீனவர்களை நிபந்தனையுடன் விடுதலை செய்வதாகவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.