தலைநகர் டெல்லியில் காற்றின் தரம் நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. டெல்லியில் இன்று காற்றின் தரக்கு குறியீடு 441 ஆக பதிவாகி உள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இது ஒரு நாளுக்கு ஒருவர் 26 சிகரெட் பிடிப்பதற்கு சமமான அளவில் காற்றில் மாசு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காற்றின் தரம் மோசமடைந்ததால் பள்ளி மாணவர்கள், வேலைக்கு செல்வோர், வயதானவர்கள் மூச்சு விடுவதில் பெரும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.
கடும் பனி மற்றும் புகை மூட்டம் காரணமாக டெல்லி முழுவதும் ரயில் மற்றும் விமான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த டெல்லி மற்றும் என்.சி.ஆர் பகுதிகளில் இன்று முதல் “நிலை 3” எனும் செயல் திட்டம் அமல்படுத்தப்படும் என்று காற்று தர மேலாண்மை ஆணையம் அறிவித்துள்ளது.