தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள நிலையில் வாக்காளர் அடையாள அட்டை, பட்டியல் ஆகியவற்றில் தங்களது விவரங்களை சரிபார்த்து கொள்ள தமிழக அரசின் தலைமை தேர்தல் அதிகாரி மற்றும் அரசு செயலாளர் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
வாக்காளர்கள் தங்கள் பெயரைச் சேர்ப்பதற்கும், வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்வதற்கும் வசதியாக இந்தியத் தேர்தல் ஆணையத்தால், 16.11.2023, 17.11.2024, 23.11.2024 மற்றும் 24.11.2024 (சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை) ஆகிய தேதிகளில் வாக்குச்சாவடி அமைவிடங்களில் சிறப்பு முகாம்கள் அறிவிக்கப்பட்டன.
வாக்காளர் பட்டியலில் பெயர் மாற்றுதல், இடமாற்றம் செய்தல், ஆதார் எண்ணை இணைத்தல் ஆகியவற்றுக்கான படிவங்கள் அந்தந்த நிர்ணயிக்கப்பட்ட அமைவிடங்களில் கிடைக்கும்.