கேரளா மாநிலத்தின் சுற்றுலாத்தளமான தேக்கடியில் பல நாட்டை சேர்ந்தவர்கள் வந்து செல்கின்றனர். அங்கு காஷ்மீரை சேர்ந்த 2 பேர் தேக்கடியில் கைவினை பொருள் விற்கும் கடை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இஸ்ரேல் நாட்டை சேர்ந்த தம்பதியினர் ஷாப்பிங் செய்ய வந்துள்ளனர். அவர்கள் இஸ்ரேல் நாட்டை சேர்ந்தவர்கள் என தெரிந்த உடனே, பாலஸ்தீன இஸ்லாமியர்களை உங்கள் நாடு சிரமப்படுத்துவதாக கூறி வெளியேற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த இஸ்ரேல் தம்பதியினர், தாங்கள் பொருட்கள் வாங்க வந்திருப்பதாகவும், வேறுபாடு பார்க்காமல் நடந்து கொள்ளுமாறும் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அங்கு கூடிய வியாபாரிகளும் இஸ்ரேல் தம்பதியினருக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். பின்னர் கடைக்காரர்கள் இஸ்ரேல் தம்பதியரிடம் மன்னிப்பு கேட்டனர்.
சுற்றுலா பயணிகளை அவமதித்த கடை உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க தேக்கடி வணிகர் சங்கம் முடிவு செய்துள்ளது.