அமெரிக்கத் தொழில்முறை குத்துச்சண்டை வீரர் மைக் டைசன்(58). இவர் தனது வாழ்நாளில் 59 குத்துச் சண்டை போட்டிகளில் பங்கேற்று 50 போட்டிகளில் வெற்றி வாகை சூடியிருக்கிறார்.
19 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது அமெரிக்காவின் டெக்சாஸில் நடைபெற்ற குத்துச் சண்டை போட்டியில் மைக் டைசன் பங்கேற்றார். இதில் அவருக்கு போட்டியாக ஜேக் பால்(27) என்பவர் களமிறங்கினார். இவர் குத்துச்சண்டை போட்டிகளில் பங்கேற்பதற்கு முன்பு யூடியூபராக அறியப்பட்டார்.
இந்நிலையில் இன்று நடைபெற்ற குத்துசண்டை போட்டியை நெட் ஃபிளிக்ஸ் நேரலையில் லட்சக்கணக்கானோர் பார்வையிட்டு வந்தனர். இரண்டு நிமிட சுற்றுடன் மொத்தம் எட்டு சுற்றுகளாக நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் ஜேக் பால் 80-72 மற்றும் 79-73 என்ற புள்ளிகளில் மைக் டைசனைத் தோற்கடித்தார். இதனால் மைக் டைசன் ரசிகர்கள் ஏமாற்றத்துடன் அரங்கத்தை விட்டு வெளியேறினர்.