குரோம்பேட்டை கணபதிபுரத்தை சேர்ந்த ஐ டி ஊழியரான அமுதன் அவரது மனைவி புவனா. இவர் பல் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் ரேடியல் சாலை ஹோட்டலுக்கு சாப்பிட சென்றுள்ளார்.
ஹோட்டலுக்கு நுழையும் பகுதியில் உள்ள ரேம்பில் கார் செல்லும் பொழுது முதியவர் விசுவதாஸ் மீது உரசியபடி சென்றதாக கூறப்படுகிறது.
இதில் முதியவர் விஸ்வதாஸுடன் வந்திருந்த அவரது மகன் மகேந்திரனுக்கும் அமுதனுக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து சமாதானமான அவர்கள் ஹோட்டலுக்குள் சென்று சாப்பிட சென்றுள்ளனர்.
அப்போது கோபம் குறையாத மகேந்திரன் ஹோட்டலுக்குள் மருத்துவ மனைவியுடன் சாப்பிட்டுக் கொண்டிருந்த அமுதனை சரமாரியாக தாக்கியுள்ளார். அப்பொழுது தடுக்க முற்பட்ட பெண் என்னும் பாராமல் மருத்துவரையும் சரமாரியாக தாக்கியுள்ளார்.