மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 288 தொகுதிகளுக்கு நாளை (நவ.20) ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதற்காக அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டனர்.
தேர்தல் பிரசாரம் நேற்று ஒய்ந்த நிலையில், இன்று பல்ஹார் மாவட்டம் விரார் என்ற இடத்தில் பகுஜன் விகாஸ் அகாடி கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ., தன் ஆதரவாளர்களுடன் சொகுசு ஹோட்டலுக்குள் அதிரடியாக புகுந்தார்.
அப்போது ஹோட்டல் அறையில் பாஜக முன்னாள் அமைச்சர் வினோத் தவாடே, மற்றும் பாஜக எம்.எல்.ஏ., ராஜன் நாயக் ஆகியோர் கட்டுக்கட்டாக பணத்துடன் வாக்காளர்களுக்கு விநியோகம் செய்து கொண்டிருந்தனர்.
பணத்துடன் கையும் களவுமாக வினோத் தவாடே சிக்கியதால், அவர்களிடம் வாக்குவாதம் செய்து சமாளித்தார். வினோத் தவாடேயிடமிருந்து மொத்தம் ரூ. 5 கோடி ரொக்கப்பணம் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.