26
உத்தரபிரதேச மாநிலத்தில் 9 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலையிலிருந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் வாக்கு செலுத்த வந்த இஸ்லாமியர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதாக உத்தரபிரதேச எதிர்க்கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு புகார் அளித்தார்.
இதையடுத்து இஸ்லாமிய மக்களை வாக்களிக்க விடாமல் தடுத்த 7 காவலர்களை சஸ்பெண்ட் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.