18
புதுக்கோட்டை மாவட்ட உள்ளாட்சித் துறை தொழிலாளர்கள் சங்கம் சார்பாக அறந்தாங்கி நகராட்சி தற்காலிக துப்புரவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஊழியர்களுக்கு அக்டோபர் மாதம் சம்பளம் வழங்காததை கண்டித்தும் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு மாத சம்பளம் 5ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும்.
அரசு போட்ட ஒப்பந்த அடிப்படையில் பிடித்தம் செய்த EPS, EPF தொகையை உரிய நிறுவனத்தில் கட்ட வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன் வைக்கப்பட்டது.
CITU அறந்தாங்கி ஒருங்கிணைப்பாளர் கர்ணா மற்றும் பொதுச் செயலாளர் முகமது ஜின்னா முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் 50 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர்.