110
ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
சூறை காற்று வீசியதால் மரங்கள் முறிந்து வேருடன் சாய்ந்தும் விழுந்தன. இதனால் பல்வேறு இடங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளன. அவற்றை சீர் செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மின்கட்டணம் செலுத்த டிசம்பர் 10 ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.