71
வங்கக்கடலில் உருவான ஃபெஞ்ஜால் புயல் கடந்த சனிக்கிழமை மரக்காணம் – புதுச்சேரி இடையே கரையை கடந்தது. இதன் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் கனமழை கொட்டி தீர்த்தது. விழுப்புரம் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் மழை நீர் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே சங்கராபாணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதனால் இன்று காலை முதல் ஒரு வழியில் மட்டுமே போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது.
தேசிய நெடுஞ்சாலையில் இருபுறமும் வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் போக்குவரத்து முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ளது. தற்போது வெள்ளநீர் குறைய தொடங்கியுள்ளதால் சில மணி நேரங்களில் மீண்டும் போக்குவரத்து துவங்க வாய்ப்பு உள்ளது.