தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் முருகன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. தமிழகம் மட்டும் இன்று பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து முருகனை வணங்கிவிட்டு செல்கின்றனர்.
இந்நிலையில் இன்று மதியம் 3.30 மணியளவில் தெய்வானை யானைக்கு பழம் கொடுக்க பாகன் உதயகுமார் சென்றுள்ளார். அவருடன் அவரது உறவினர் சிசுபாலன் என்பவரும் இருந்துள்ளார். சிசுபாலன் யானையின் தும்பிக்கையை தடவி முத்தமிட்டுள்ளார்.
மீண்டும் யானையின் தும்பிக்கையை தொட முயன்ற போது யானை சிசுபாலனை தும்பிக்கையால் இருக்க பிடித்துக் கொண்டது. இதனைப் பார்த்த உதவி பாகன் உதயகுமார் காப்பாற்ற வந்தபோது அவரை தும்பிக்கையால் தள்ளி விட்டுள்ளது. இதில் உதயகுமார் யானை மண்டபத்தில் உள்ள சுவற்றில் மோதி படுகாயம் அடைந்தார். சிசுபாலன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
படுகாயமடைந்த உதயகுமார் உடனடியாக மீட்கப்பட்டு அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவில் யானை மிதித்ததில் பாகன் உட்பட இரண்டு பேர் உயிரிழந்ததால் கோவில் நடை அடைக்கப்பட்டது. யானை மிதித்ததாக இருவர் உயிரிழந்த சம்பவம் திருச்செந்தூர் கோவிலில் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.