நடிகை கஸ்தூரி சில நாட்களுக்கு முன்பு சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டம் ஒன்றில் தெலுங்கு மொழி பேசும் மக்கள் குறித்தும் தெலுங்கு பெண்கள் குறித்தும் அவதூறாக பேசியிருந்தார். இதையடுத்து நடிகை கஸ்தூரி மீது நடவடிக்கை எடுக்க கோரி பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த புகாரின் பெயரில் ஹைதராபாத்தில் தலைமறைவாக இருந்த கஸ்தூரியை போலீசார் கைது செய்து சென்னை அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
புழல் சிறையில் அடைக்கப்பட்ட நடிகை கஸ்தூரிக்கு எழும்பூர் நீதிமன்றம் நேற்று நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.
இந்நிலையில் சிறையில் இருந்து வெளியே வந்த நடிகை கஸ்தூரியை அவரது ஆதரவாளர்கள் பலர் திரண்டு நின்று வரவேற்றனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசுகையில், “சிறையில் என்னை நன்றாக நடத்திய அனைவருக்கும் நன்றி. எனக்கு ஆதரவளித்த தெலங்கானா, ஆந்திர மக்களுக்கும் நன்றி. என்னை உயிருக்கு உயிராக நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி. சிறு குரலாக இருந்த என்னை சீறும் புயலாக மாற்றிய அனைவருக்கும் நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.