ஈஷா யோகா மையம் குறித்து அவதூறு பரப்பி வருவதாக வார பத்திரிக்கையை கண்டித்து இந்து மக்கள் கட்சி சார்பில் கடந்த மாதம் 27ம் தேதி ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத்தின் மகன் ஓம்கார் பாலாஜி, வாரப் பத்திரிக்கை ஆசிரியர் நக்கீரன் கோபாலின் நாக்கை அறுத்து விடுவதாக பேசி இருந்தார். அவருடைய இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக ஓம்கார் பாலாஜி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளார். பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், குற்ற நோக்குடன் செயல்படுதல் என்ற இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்து மக்கள் கட்சியின் இளைஞர் அணித் தலைவர் ஓம்கார் பாலாஜியை காவல் துறையினர் கைது செய்யப்பட்டு உள்ளதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக அக்கட்சியினர் அறிவித்து உள்ளனர்.