ஆந்திர மாநிலம் அனக்காப்பள்ளி நகரில் உள்ள கொல்லவீதியில் கார்த்திகை பௌர்ணமியை முன்னிட்டு நேற்று சாமியின் சப்பர ஊர்வலம் நடைபெற்றது.
அந்தப் பகுதி வழக்கப்படி இலை தலைகளை பறித்து வந்து தோரணமாக கட்டி ஜுவாலை தோரணம் என்ற பெயரில் அதற்கு தீ மூட்டினர். அப்போது அந்த ஜுவாலை தோரணம் எதிர்பாராத விதமாக தீப்பற்றி எரிந்து தீ அருகில் இருந்த மரத்திற்கும் பரவியது.
பற்றி எரிந்த தீ கங்குகள் கீழே விழுந்து மூன்று பக்தர்கள் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்த பக்தர்கள் மூன்று பேரையும் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் நகரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
ஜூவாலை தோரணம் தீ பிடித்து எரிந்தது பற்றி வழக்கு பதிவு செய்துள்ள அனக்காப்பள்ளி போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.