94
வங்கக்கடலில் நேற்று உருவான ‘பெஞ்சல்’ புயல் இன்று மாமல்லபுரம் – காரைக்கால் இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ‘பெஞ்சல்’ புயலின்போதும் மெட்ரோ ரெயில்கள் வழக்கம்போல் இயங்கும் என சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. சனிக்கிழமை அட்டவணைப்படி காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை இயங்கும்.
பாதுகாப்பு காரணங்களுக்காக, அனைத்து மெட்ரோ நிலையங்களிலும் படிக்கட்டுகளைப் பயன்படுத்தும் போது பயணிகள் கவனமாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.