சென்னையில் கடந்த 3-ந்தேதி பிராமண சமூகத்தினர் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் நடிகை கஸ்தூரி கலந்து கொண்டார். அப்போது தெலுங்கு மக்கள் குறித்து அவர் பேசியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவரது கருத்துகளுக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இதையடுத்து நடிகை கஸ்தூரி மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவரை பிடிக்க இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில் ஹைதராபாத்தில் அவர் கைது செய்யப்பட்டார்.
நடிகை கஸ்தூரியை கைது செய்த காவலர்கள் அண்மையில் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். கஸ்தூரிக்கு வரும் 29-ஆம் தேதி வரை எழும்பூர் நீதிமன்றம் நீதிமன்றக் காவல் விதித்திருந்தது. இந்த வழக்கில் பிணை கோரி கஸ்தூரி தரப்பில் அவரின் வழக்கறிஞர் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில் நடிகை கஸ்தூரிக்கு சென்னை எழும்பூர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.