7
சென்னை கிண்டியில் கலைஞர் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு பாலாஜி ஜெகன்நாதன் என்பவர் புற்றுநோய் துறையில் மருத்துவராக உள்ளார்.
இந்நிலையில் விக்னேஷ் என்ற நபர் தனது தாய்க்கு சரியாக சிகிச்சை அளிக்கவில்லை எனக்கூறி மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கத்தியால் குத்தப்பட்ட மருத்துவர் பாலாஜி படுகாயங்களுடன் அதே மருத்துவமனையில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஒரு நபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.