ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள காய்கறி மார்க்கெட்டில் கடை வைப்பது தொடர்பாக அங்கு வியாபாரம் செய்து வரும் வியாபாரிகளிடையே சில நாட்களாக பிரச்சனை இருந்து வந்தது.
ஒருவருடைய இடத்தை மற்றொருவர் ஆக்கிரமித்து கடை வைத்ததன் காரணமாக அந்த பிரச்சனை ஏற்பட்டது.
இந்நிலையில் இன்று மீண்டும் அதே பிரச்சனை எழுந்துள்ளது. இதனால் அங்கு வியாபாரம் செய்யும் வியாபாரிகளில் பெண்கள் ஒருவருக்கொருவர் தலைமுடியை பிடித்து இழுத்து கீழே தள்ளிவிட்டு கடுமையாக தாக்கிக்கொண்டனர்.
பெண்கள் தங்கள் வீரத்தை வெளிப்படுத்தி சண்டை போடும்போது, நாங்கள் மட்டும் சும்மா இருந்தால் எப்படி என்று கருதிய ஆண்களில் இரண்டு பேர் ஒருவருக்கொருவர் கும்மாங்குத்து விட்டு கொண்டனர்.
சண்டை போட்டுக் கொண்டிருந்த பெண்களில் இரண்டு பேர் அவர்களுடைய சண்டையை விட்டுவிட்டு ஆண்கள் போட்டுக் கொண்ட சண்டையில் உள்ளே புகுந்து அவர்களை தாக்கியதுதான் ஹைலைட்.