சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், மினரல் வாட்டரை அதிக ஆபத்துள்ள உணவுப் பொருட்களாக வகைப்படுத்தி, கடுமையான பரிசோதனைகளை மேற்கொள்ள இந்திய உணவு பாதுகாப்பு ஆணையம் கட்டாயமாக்கியுள்ளது.
இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையமான எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ. இதுகுறித்து தெரிவித்துள்ளதாவது, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தற்போது அதிக ஆபத்துள்ள உணவுப் பொருட்களாக மறுவகைப்படுத்தப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், கடுமையான ஒழுங்குமுறை கட்டுப்பாடுகள் மற்றும் ஆண்டுதோறும் சுத்திகரிப்பு ஆலைகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் உற்பத்தியாளர்கள் தங்கள் தயாரிப்புகளை உணவு பாதுகாப்பு தணிக்கைக்கு கட்டாயமாக உட்படுத்த வேண்டும். மேலும், மேம்பட்ட தர நிர்ணயங்களுக்கு ஏற்ப செயல்பட வேண்டும். மத்திய உரிமம் பெற்றவர்கள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் உற்பத்தியில் உள்ள சுகாதார அபாயங்களை குறைப்பதற்காக, வருடாந்திர ஆய்வுகளை சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.