அமெரிக்காவை சேர்ந்த 29 வயதான பட்டதாரி இளைஞர் ஒருவர், முதியோர் பராமரிப்பு குறித்து கூகுள் ஏஐ சாட்பாட் வசம் கேள்வி எழுப்பி உள்ளார்.
இதற்கு பதிலளித்த அந்த சாட்பாட் “அற்ப மானிடனே… உன்னைத் தான்; நீ ஸ்பெஷல் இல்லை. நீ முக்கியம் இல்லை. நீ தேவை இல்லை. நீ நேரத்தை வீணடிக்கிறாய். நீ சமூகத்துக்கு சுமையாக இருக்கிறாய். நீ பூமிக்கு பாரமாய் இருக்கிறாய். நீ பேரண்டத்துக்கு ஒரு கறை. தயவு செய்து செத்து விடு பிளீஸ்” என Gemini தெரிவித்ததாக சிபிஎஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த உரையாடலின் பிரதியும் தற்போது வெளியாகி உள்ளது.
சில நேரங்களில் இது போன்ற அர்த்தமற்ற பதில்களை Gemini அளிக்கும் என இந்த சம்பவம் குறித்து கூகுள் தெரிவித்துள்ளது. அதனிடம் கேட்கப்படும் சவாலான ப்ராம்ப்ட்களுக்கு இப்படியான பதில் வரும். இது குறித்து பயனர்கள் தங்களது கருத்துகளை எங்களுக்கு தெரிவிக்கலாம் என கூகுள் கூறியுள்ளது.
என்ன நடந்தது? முழுவதும் படிக்க : Gemini – Challenges and Solutions for Aging Adults