67
வடகிழக்கு பருவமழையின் காரணமாக, சென்னை உட்பட 4 மாவட்டங்களுக்கு மிகுந்த கனமழை எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மழை தொடர்ந்து பெய்யும் நிலையில், தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
இதற்கிடையில், சென்னையில் கனமழையின் தாக்கத்தை கருத்தில் கொண்டு, அரசு ஊழியர்களுக்கு முன்கூட்டியே வீடுகளுக்கு திரும்ப அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி, அனைத்து துறைகளில் பணியாற்றும் அரசு ஊழியர்கள், 4 மணிக்குள் வீடுகளுக்கு திரும்ப அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், தலைமைச் செயலக பணியாளர்களுக்கு தமிழக அரசு முன் அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.