வளிமண்டல சுழற்சி காரணமாக இந்தியப் பெருங்கடல் மற்றும் தென் கிழக்கு வங்கக்கடலை சுற்றியுள்ள பகுதியில் இன்று (டிச.,07) காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய பெருங்கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல், நேற்று முதல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில், இன்று (டிச.,07) காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது.
இது, மேற்கு,- வடமேற்கு திசையில் நகர்ந்து, வரும் 12ம் தேதி தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில், இலங்கை- தமிழகம் கடற்கரையை நோக்கி நகரக்கூடும். தமிழகத்தில் டிசம்பர் 11,12ம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.