5
அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான முன்கூட்டிய வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், மர்ம நபர்கள் வாக்குப் பெட்டிகளுக்கு தீவைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வடமேற்கு அமெரிக்க மாநிலங்களான வாஷிங்டன் மற்றும் ஓரிகானில் உள்ள மூன்று வாக்குச் சீட்டு பெட்டிகளில் மர்ம நபர்கள் தீ வைத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சம்பவ இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, வாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்ட இடத்திற்கு ஒரு கார் வந்ததும், அந்த கார் சென்ற பிறகு வாக்குப் பெட்டிகள் தீப்பிடித்து எரிந்ததும் தெரியவந்தது.