அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவில் சூரிய மின் விநியோகம் தொடர்பான ஒப்பந்தம் பெறுவதற்காக இந்திய அதிகாரிகளுக்கு சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாய் லஞ்சம் தர முன்வந்ததாக நியூயார்க் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் கவுதம் அதானி, அவரது மருமகன் சாகர் அதானி உள்ளிட்ட 7 பேருக்கு நியூயார்க் நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது.
இந்நிலையில் கென்யா நாட்டின் முக்கிய விமான நிலையத்தை விரிவுபடுத்துவதற்கான கொள்முதல் செயல்முறைக்காக அதானி நிறுவனத்துடன் அந்நாட்டு அரசு ஒப்பந்தம் செய்திருந்த நிலையில் தற்போது ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளது.
கென்ய அரசின் எரிசக்தி அமைச்சகம் 700 மில்லியன் டாலர்களுக்கு மேல் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தையும் ரத்து செய்வதாக அதிபர் வில்லியம் ரூட்டோ தெரிவித்துள்ளார்.
ஊழல் வழக்கில் நியூயார்க் நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்ததை தொடர்ந்து அதானி குழுமத்தின் சந்தை மதிப்பு 2.20 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் சரிந்து கடும் இழப்பை சந்தித்துள்ளது.