22
ஆன்லைன் பரிவர்த்தனைகள் என்பது இந்தியர்களின் அன்றாட வாழ்க்கையில் முக்கிய பங்காக மாறிவிட்டது. சிறிய கடைகள் முதல் ஷாப்பிங் மால் வரை டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவதில் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில் இந்தியாவின் டிஜிட்டல் பண பரிவர்த்தனை சேவையான UPI வசதி மத்திய அரசு உதவியுடன் மாலத்தீவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனை அந்நாட்டு அதிபர் முகம்மது முய்சு அறிமுகம் செய்துள்ளார்.
ஏற்கனவே சிங்கப்பூர், மலேசியா, ஐக்கிய அரபு அமீரகம், நேபாளம், பூடான் உள்ளிட்ட நாடுகளில் யு.பி.ஐ., வசதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.