அதானி – முதல்வர் மு.க.ஸ்டாலின் ரகசிய சந்திப்பு குறித்து விளக்க வேண்டும் என ராமதாஸ் அறிக்கை வெளியிட்டு இருந்தார். இதற்கு ராமதாஸுக்கு வேறு வேலை இல்லை, அதனால் அறிக்கை விடுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்தார். இந்நிலையில் அதே பாணியில் அமைச்சர் சேகர்பாபு, எடப்பாடி பழனிச்சாமியை விமர்சனம் செய்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, உதயநிதி பிறந்தநாளை விமரிசையாக கொண்டாடுகிறார்கள் என எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளாரே என்ற கேள்விக்கு, “தனது பிறந்தநாளுக்கு விளம்பர பதாகைகள் வேண்டாம், ஆடம்பரம் வேண்டாம், ஏழை எளிய மக்கள் மற்றும் திருநங்கைகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்க வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் அறிவித்து இருந்தார். இதனை எப்படி ஆடம்பரம் என்று எடுத்துக்கொள்ள முடியும்?
காமாலை கண்களுக்கு கண்டதெல்லாம் மஞ்சளாகவே தெரியும். எங்கள் தலைவர் மு.க.ஸ்டாலின் பாணியில் சொல்ல வேண்டும் என்றால் எடப்பாடி பழனிசாமிக்கு வேறு வேலை இல்லை. அதனால் இப்படி அறிக்கை விட்டுக்கொண்டு இருக்கிறார்” என்று விமர்சனம் செய்துள்ளார்.