76
விழுப்புரம் மாவட்டத்தில் ஃபெஞ்ஜல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்திப்பதற்க்காக அமைச்சர் பொன்முடி அவரது மகனும், முன்னாள் எம்பியுமான கவுதம் சிகாமணி, கலெக்டர் பழனி ஆகியோர் சென்றுள்ளார்.
அப்போது அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசப்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. கவுதம சிகாமணி, கலெக்டர் பழனி மற்றும் அருகே நின்ற நிர்வாகிகள், அதிகாரிகள், போலீசார் ஆகியோரின் சட்டைகளில் சேறு பட்டது.
அதன்பிறகு அவர்களை போலீசார் பத்திரமாக காரில் அழைத்து சென்றனர். இதுதொடர்பான வீடியோ வெளியாகி வலைதளங்களில் பரவி வருகிறது.