பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5ம் தேதி சென்னையில் கொலை செய்யப்பட்டார். இது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த கொலை வழக்கில் வடசென்னை ரவுடி நாகேந்திரன், அவனுடைய மகன் அஸ்வத்தாமன் உள்ளிட்ட 30 பேரை போலீசார் கைது செய்தனர். அதில் இருவரை போலீசார் என்கவுண்டர் செய்தனர். ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்தில் தலைமறைவாக இருக்கும் செந்தில் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலையில் A1 குற்றவாளி நாகேந்திரன் போலீசில் அளித்துள்ள வாக்குமூலம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வாக்குமூலத்தில் ” எனது மகன் அரசியலில் வளர்வதை ஆம்ஸ்ட்ராங்கிற்கு பிடிக்கவில்லை என்பதனால் சிறையில் இருந்தவாறே ஆர்ம்ஸ்ட்ராங்கை எச்சரித்ததாக தெரிவித்துள்ளார். ஆர்ம்ஸ்ட்ராங் கொலை திட்டம் குறித்து வழக்கறிஞர் அருள் கூறியதாக எனது மகன் அஸ்வத்தாமன் என்னிடம் கூறினார்.
குரோம்பேட்டை தனியார் மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்கு வந்த போது எனது மகன் சந்தித்து கூறினார். இது தான் நல்ல சான்ஸ், அவுனுங்கள செய்யச் சொல்லு, செலவை நாம பார்த்துக்கலாம் எனவும் கூறியுள்ளார்.
ஆம்ஸ்ட்ராங்கை தீர்த்துக்கட்ட ஆற்காடு சுரேஷ் கொலையை பயன்படுத்திக் கொண்டு முடிக்க வேண்டும், அதற்கு என்ன செலவானாலும் பார்த்துக் கொள்கிறேன் என்று வாக்குமூலம் அளித்துள்ளார்.
ஐஓசி காண்ட்ராக்டர் ஜெயபிரகாஷை துப்பாக்கியை காட்டி அஸ்வத்தம்மன் மிரட்டிய விவகாரத்தில் கைது செய்ய ஆர்ம்ஸ்ட்ராங் தான் காரணம், என்பதால் எனக்கு அவர் மீது கடும் கோபம் ஏற்பட்டது.
எனது மகனுக்கு எதாவது ஆச்சுனா நான் எந்த லெவலுக்கும் போவேன் என எச்சரித்தேன். தனது மகன் அஸ்வத்தாமன் அரசியலில் மேலே வராமல் இருக்க ஆர்ம்ஸ்ட்ராங் தான் காரணம்”
இவ்வாறு நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.