முன்னாள் ஹெவி வெயிட் சாம்பியன் மைக் டைசன் மற்றும் குத்துச்சண்டை வீரரான ஜேக் பால் இடையிலான குத்துச்சண்டை போட்டியை நேரலை ஸ்ட்ரீம் செய்ய நெட்ஃபிளிக்ஸ் தளம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்காவின் டெக்சாஸில் உள்ள ஆர்லிங்டன் ‘ஏடி அண்ட் டி’ விளையாட்டு அரங்கில் இந்தப் போட்டி நாளை நடைபெற உள்ளது.
மைக் டைசன் Vs ஜேக் பால் இடையிலான இந்தப் போட்டி தலைமுறைகள் கடந்த இரண்டு வீரர்களுக்கு இடையிலான போட்டியாக பார்க்கப்படுகிறது.
இந்தப் போட்டியை அரங்கில் இருந்து சுமார் 80,000 பேர் பார்க்க உள்ளனர். நெட்ஃபிளிக்ஸ் நேரலையில் 280 மில்லியன் பயனர்கள் பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2018-ல் குத்துச்சண்டை போட்டிகளை நேரலை செய்வதை நிறுத்திக் கொள்வதாக ஹெச்பிஓ அறிவித்தது. இந்த நிலையில் தான் நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் அதை கையில் எடுத்துள்ளது.