தென் மாநிலங்களில் கடந்த அக்டோபர் மாதம் 15ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை இயல்பை விட அதிகமாக இருக்கும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்திருந்தது.
கடந்த மாதம் காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுப்பெற்றது. அந்த புயலுக்கு டானா என பெயர் வைக்கப்பட்டது. அந்த புயல், ஒடிசா அருகே கரையை கடந்தது.
இந்நிலையில் மீண்டும் வடகிழக்கு பருவமழை வேகம் எடுக்க ஆரம்பித்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு, ஆந்திரா, கேரளாவில் நவம்பர் மாதத்தில் இயல்பை விட கூடுதலாக மழை பெய்யும். நவம்பர் இரண்டாவது வாரத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடையும் என்றும் இந்திய வானிலை மையம் கணித்துள்ளது.
நவம்பர் மாதம் இரண்டாவது வாரத்தில் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழ்நாட்டை நோக்கி நகர வாய்ப்புள்ளதாகவும் நவம்பர் மாதத்தில் இயல்பை விட 123 சதவீதம் அதிக மழை பொழிவு இருக்கும் என இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.