பெரம்பலூர் மாவட்ட அதிமுக சார்பில், திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு பதவி ஏற்ற பிறகு விலைவாசி உயர்வு பல மடங்கு உயர்ந்துள்ளதாகவும், சொத்து வரி உயர்வு, குடிநீர் கட்டணம் மற்றும் மின் கட்டண உயர்வு உள்ளிட்ட பல்வேறு வரிவிதிப்புகள் 100 மடங்கு அதிகரித்து விட்டதாகவும், இதனால் அடித்தட்டு ஏழை எளிய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் மற்றும் குரும்பலூர் ஆகிய பகுதிகளில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், அதிமுக மாவட்ட செயலாளருமான தமிழ்ச்செல்வன் தலைமையில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அதிமுகவினர் தமிழக அரசின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தியும், விலைவாசி உயர்வினை குறைக்க வலியுறுத்தியும் கோஷமிட்டனர்.
இந்த போராட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள், மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் என ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.