வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானதை தொடர்ந்து, நேற்று இரவு முதல் சென்னையில் மழை தொடங்கியுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் வரும்17-ம் தேதி வரை கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும். சென்னையில் மழைப்பொழிவு தொடரும் எனவும், பின்னர் கனமழை பெய்யும் எனவும் கூறப்பட்டுள்ளது. வட தமிழ்நாட்டை சுற்றிய கடற்பகுதியில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலவுகிறது. ஆனால் அது வலுப்பெற வாய்ப்பு இல்லை. தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.