110
95 பேருடன் சென்ற ரஷ்யா விமானம் துருக்கியின் தெற்குப் பகுதியில் உள்ள அந்தாலியா விமான நிலையத்தில் தரையிறங்கும்போது, விமானத்தின் என்ஜின் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சம்பவத்தை அடுத்து பயணிகள் மற்றும் விமான பணியாளர்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.
தீ விபத்திற்கான காரணம் குறித்து உடனடியாக தகவல் ஏதும் தெரிவிக்கப்படவில்லை. இந்த விபத்து தொடர்ந்து ஓடுபாதையில் இருந்து விமானத்தை அப்புறுப்படுத்தும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.