வரும் அக்டோபர் 31ம் தேதி நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. பண்டிகையை கொண்டாட வெளியூரில் உள்ள மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம்.
அந்த வகையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக, சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ்நாட்டில் மொத்தமாக 14 ஆயிரத்து 086 சிறப்பு பேருந்துகளை இயக்க போக்குவரத்துத்துறை திட்டமிட்டுள்ளது. தீபாவளியையொட்டி வரும் 28-ம்தேதி முதல் 30-ம் தேதி வரை சிறப்பு பேருந்துகளை இயக்கப்பட உள்ளது.
சென்னையில் இருந்து 11 ஆயிரத்து 176 பேருந்துகளும், பிற மாவட்டங்களில் இருந்து 2 ஆயிரத்து 910 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரத்தில் இருந்து சிறப்பு பஸ்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
நவம்பர் 2-ம் தேதி முதல் 4-ம் தேதி வரை சென்னை திரும்ப வசதியாக 9 ஆயிரத்து 441 பேருந்துகளை இயக்க போக்குவரத்துத் துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.