346
வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுவடையாது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாளை மாலை காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலு குறைந்து நாளை மறுநாள் (நவம்பர் 30) காலை காரைக்கால் – மகாபலிபுரம் இடையே கரையை கடக்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் இன்று இரவு முதல் மழையின் அளவு அதிகமாக இருக்கும் என்றும் அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழகத்தில் பலத்த மழை பெய்யும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.