AI சிப்செட்களின் விலை அதிகரிப்பு, 5ஜி நெட்வர்க்கின் வருகையினால் ஏற்பட்டிருக்கும் செலவுகள் ஆகிய காரணங்களால் வரும் 2025ஆம் ஆண்டில், செல்போன் விலை அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
இது குறித்த மார்க்கெட் அவுட்லுக் அறிக்கையில், 2024ஆம் ஆண்டில் ஸ்மார்ட் போன்களின் சராசரி விற்பனை விலை, உலகளவில் 3 சதவிகிதம் அதிகரித்து இருக்கும் என கூறப்பட்டிருக்கிறது. அதாவது, அமெரிக்க டாலர் விலையின் படி, $365ஆக இருக்குமாம். இந்த விலை, வரும் 2025ஆம் ஆண்டில், மேலும் 5 சதவிகிதம் அதிகரிக்கலாம் எனக்கூறப்படுகிறது.
உலக மக்கள், தற்போது அதிக சக்தி வாய்ந்த ப்ராசசர்கள் மற்றும் AI தொழில்நுட்பம் அடங்கிய அதிக விலையுள்ள ஸ்மார்ட் போன்களை வாங்க ஆர்வம் காட்டுகின்றனர். பலர், இந்த அம்சம் இருக்கும் போன்களுக்குத்தான் முக்கியத்துவமும் கொடுக்கின்றனர். இது, விலை அதிகரிப்புக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
இந்த AI அம்சங்கள் அடங்கிய போன்களை வாங்க மக்கள் முன்னுரிமை கொடுத்து வருகின்றனர். இதன் காரணமாக அடுத்த ஆண்டில் செல்போன் விலையும், அதன் உற்பத்தியும் அதிகரிக்கலாம் எனக்கூறப்படுகிறது.